கடலுார்; தமிழகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலையொட்டி, கடலுார்
மாவட்டத்தில் 9 தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் 1000
வாக்காளர்களுக்கும் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகள் 843 ஆக
பிரிக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்ததையடுத்து,
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர
நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.கொரோனா காரணமாக சமூக இடைவெளி, முகக் கவசம்
கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக சமூக இடைவெளியைக்
கடைபிடிக்க 1000 பேருக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது என
தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.அதனைத் தொடர்ந்து கடலுார் கலெக்டர்
அலுவலகத்தில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
நடந்தது.அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், கடலுார் மாவட்டத்தில் உள்ள 9
சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கும்
மேல் 843 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.அதன்படி திட்டக்குடி
தொகுதியில் மொத்தமுள்ள 247 ஓட்டுச்சாவடி மையங்களில் 1000 வாக்காளர்களுக்கு
மேல் 70 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.கூடுதல் ஓட்டுச்சாவடிகளாக 317
உள்ளன.விருத்தாசலத்தில் 282 ஓட்டுச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கும்
மேல் 82 சேர்த்து 364 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.நெய்வேலியில் 231
ஓட்டுச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கு மேல் 87 சேர்த்து 313
ஓட்டச்சாவடிகள் உள்ளன.பண்ருட்டியில் 257 ஓட்டுச்சாவடிகளில் 1000
வாக்காளர்களுக்கு மேல் 95 சேர்த்து 352 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.கடலுாரில்
227 ஓட்டுச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கு மேல் 129 சேர்த்து 356
ஓட்டுச்சாவடிகள் உள்ளன.குறிஞ்சிப்பாடியில் 256 ஓட்டுச்சாவடிகளில் 1000
வாக்காளர்களுக்கு மேல் 103 சேர்த்து 359 ஓட்டுச்சாவடிகள்
உள்ளன.புவனகிரியில் 285 ஓட்டுச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கு மேல் 79
சேர்த்து 364 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.சிதம்பரத்தில் 260 ஓட்டுச்சாவடிகளில்
1000 வாக்காளர்களுக்கு மேல் 112 சேர்த்து 372 ஓட்டுச்சாவடிகள்
உள்ளன.காட்டுமன்னார்கோவிலில் 250 ஓட்டுச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கு
மேல் 86 சேர்த்து 336 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.மாவட்டம் முழுதும் 9
தொகுதிகளில் 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிவகள் 843 ஆக
பிரிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment