
ரஜினிக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததால் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைய உள்ளார்.
சென்னையின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நபர்களில் ஒருவர். ஆனால் அவர் ஆசை நிராசையானதை அடுத்து தற்போது பாஜக பக்கம் திரும்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்த போது 2002 முதல் 2005 வரை இவர், பொறுப்பு மேயராக பதவி வகித்தார். அதன்பின் 2005 இல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆறு மாதக்காலத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ரஜினிக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்த வந்த இவர், வரும் வியாழக்கிழமை (11.02.21) அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக மேலிட துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment