
கடலுார்: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தொழிலாளர் சமூக
வல்லுனர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர்
அலுவலக செய்திக்குறிப்பு:பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம்,
பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் ஊரக
புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் மூலம் நுண்,
சிறு, குறு நிறுவனங்களை உருவாக்கவும், ஊராட்சியில் உற்பத்தியாளர்கள்
மற்றும் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்களாக உருவாக்கி தேவையான
பயிற்சி வழங்க ஊராட்சிகளுக்கு தலா 1 நபர் வீதம் மொத்தம் 280 தொழில்சார்
சமூக வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு 20 முதல் 45 வயதிற்குள்
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியும், சுய உதவிக்குழு
உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.தகுதியானவர்கள் ஊராட்சி அளவிலான
கூட்டமைப்பு மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எழுத்து மற்றும்
நேர்முகத் தேர்வு மூலம் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விபரங்களுக்கு
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், இரட்டை பிள்ளையார் கோவில் தெரு,
புதுப்பாளையம், கடலுார், தொலைபேசி 04142-210185 என்ற எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment