கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் நுழைந்த வீரரை இந்திய ராணுவ வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த ஆண்டு ஜூன்15-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள்வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் எல்லையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கிழக்கு லடாக்கில் நேற்று முன்தினம் அதிகாலை பாங்காக் ஏரியின் தென் பகுதிக்கு அருகே இந்திய எல்லைக்குள் காணப்பட்ட சீன வீரர் ஒருவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் பிடித்தனர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய எல்லைக்குள் பிடிபட்ட சீன வீரர், உரிய விதிமுறைகளின் கீழ் கையாளப்படுகிறார். எந்த சூழ்நிலையில் அவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் கடந்த சில மாதங்களில் இந்திய எல்லைக்குள் இரண்டாவது முறையாக சீன வீரர் பிடிபட்டுள்ளார். இதற்கு முன் கடந்த அக்டோபர் 19-ம் தேதி டெம்சோக் பகுதியில் வாங் லா லாங் என்ற சீன வீரர் பிடிபட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிவிக்க ராணுவத்துக்கு சீன ராணுவத்திடம் இருந்து வந்தது. அந்த வீரர் 2 நாட்களுக்குப் பிறகு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment