
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுகவும் களம் காண்கின்றன. அவர்களுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் களத்தில் உள்ளன.
இந்நிலையில் தற்போதுவரை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் இருந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் அதிமுக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவதால் பாமக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பாமக போட்டியிட 118 தொகுதிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் தனி தொகுதிகளும் இருக்கின்றன. 118 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றி அண்புமணி ராமதாஸ் தலைமையில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பாமக தனித்து போட்டியிட்டால் அதிமுக, திமுகவுக்கு பாதகமாக அமையும். கடந்த தேர்தலில் கூட பாமக தனித்து போட்டியிட்டது. 64 தொகுதிகளில் அதிமுக, திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது பாமகதான். இப்போது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் இருப்பதால் பாமக தனித்து போட்டியிட்டார் ஓட்டு மேலும் பிரியும் என்று அரசியர் நோக்கர்கள் கருதுகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment