
இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கும் யோசனையை முன்வைத்த, நடிகர்
கமல்ஹாசனுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வரவேற்பு
தெரிவித்துள்ளார்.ஆனால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்,
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு வித்தியாசமான யோசனையை
கூறினார்.'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு, மாதச் சம்பளம்
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இந்த யோசனை, தேசிய அளவில்,
தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில்
ஒருவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் கூறியுள்ளதாவது:கமல்ஹாசனின்
யோசனையின்படி, வீட்டு வேலைகளையும், ஒரு பணியாக அங்கீகரிப்பதோடு, அவற்றை
செய்யும் இல்லத்தரசிகளுக்கு, அரசாங்கமே சம்பளம் தருவது என்பது, மிகுந்த
வரவேற்புக்குரியது.இல்லத்தரசிகளின் உழைப்பு, பணமாக மாறுவதோடு, சமூகத்தில்
நல்லதோர் அங்கீகாரமும், அவர்களுக்கு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.இது
குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளாதாவது: எங்களது அன்பான
உறவுகளுக்கு பணிவிடை செய்வதற்கு, விலை நிர்ணயிக்க வேண்டாம்.
எங்களுக்கு சொந்தமானவர்களை, நாங்கள் தாயைப் போல கவனித்து
கொள்வதற்கு, சம்பளம் தர வேண்டாம்.எங்கள் மாளிகையில், நாங்கள்
இல்லத்தரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை.அனைத்தையுமே வர்த்தகமாக
பார்க்காதீர். எங்களிடம், உங்களை ஒப்படைத்து விடுங்கள். பதிலுக்கு,
உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பையும், மரியாதையையும்
மட்டுமே. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment