தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.85.73 கோடியில் கட்டப்பட்டுள்ள 8 பாலங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பொதுப்பணித் துறை சார்பில் ரூ.24.78 கோடியில் கட்டப்பட உள்ள தடுப்பணை, அணைக்கட்டு உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம் மாவட்டம் திருச்செங்கோடு - அரியானூர் சாலையில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர், தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை - உடன்குடி சாலையில் மணி நகர் பகுதி, புதுக்கோட்டை மாவட்டம் செங்கமேடு பகுதி, தேனி மாவட்டம் பூலாநந்தபுரம், சேலம் மாவட்டம் புங்கமடு மற்றும் வசிஷ்ட நதியின் குறுக்கே என 6 பாலங்கள், பீளமேடு - கோவை வடக்கு ரயில் நிலையங்கள் இடையே கண்ணப்பன் நகரில் ரயில்வே கீழ் பாலம் என ரூ.40.73 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கிராமத்தில் பந்தனேந்தல் கண்மாய்க்கு நீர் வழங்க குண்டாற்றின் குறுக்கே ரூ.10.10 கோடியில் 791.97 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அணைக்கட்டு கட்டும் பணி என ரூ.24.78 கோடியில், பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர்சண்முகம், பொதுப்பணித் துறைசெயலாளர் மணிவாசன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் கார்த்திக்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment