
மெரினா கடற்கரை சாலையில்நேற்றும் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து, போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடைவிதித்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடற்கரைகளுக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் டிசம்பர்31-ம் தேதி இரவு முதல் வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்வதைத் தடுக்க இரு நாட்களாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 6 மணிவரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் போலீஸார் சென்று விட்டனர்.
அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பொதுமக்கள் அதிக அளவில் கடற்கரைக்கு வரஆரம்பித்தனர். காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காமராஜர் சாலையில் செல்ல ஆரம்பித்தனர். கடற்கரைக்குள்ளும் கும்பலாக சென்றனர்.
இதையடுத்து அங்கு மீண்டும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். விரைந்து வந்தபோலீஸார் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். தலைக்கவசம், முகக்கவசம் அணிந்திருந்தோரை எச்சரித்து அனுப்பினர். மற்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடற்கரைக்கு உள்ளே சென்றவர்களை எச்சரித்து வெளியே செல்லும்படி அனுப்பினர்.
தொடர்ந்து கடற்கரைக்கு செல்லும் வழிகளை தடுப்புகள் வைத்து அடைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று முதல் கடற்கரைக்குபொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதியில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment