
சென்னையில் தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம்ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் அதே நிறுவனத்தின் லாக்கர்களில் வைத்து சீலிடப்பட்டன. சமீபத்தில் பார்த்தபோது, அதில் 103 கிலோ தங்கம்மாயமாகி இருந்தது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
அங்குள்ள லாக்கர்கள் உடைக்கப்படவில்லை. சீல்கள் அகற்றப்பட்டு சாவிகள் மூலமாகவே திறக்கப்பட்டுள்ளன.
எனவே, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சாவிகளை எடுத்துவந்தோ, மாற்று சாவிகள் தயாரித்தோ அல்லது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட மாற்று சாவிகள் மூலமாகவோ லாக்கர்கள் திறக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக, லாக்கர்தயாரித்த நிறுவனத்திடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment