
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனினும் பல்வேறு மாணவர்கள் செல்போன் மற்றும் இணைய வசதி இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் வகுப்புகளில் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் 9,69,047 மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இவை ஜனவரி முதல் ஏப்ரல் வரை என 4 மாதங்களுக்கு தினமும் 2GB டேட்டா என்ற அளவில் வழங்கப்படவுள்ளது. மேலும் எல்காட் நிறுவனத்தின்
மூலம் டேட்டா கார்டு வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment