
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி பகுதியில் புருஷோத்தமன்(51) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தமிழக காவல்துறையில் லஞ்சஊழல் தடுப்புப்பிரிவில் ஆலந்தூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
புருஷோத்தமனின் இளையமகன் யுகசிற்பி(20), ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் கல்லூரி திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்த படி ஆன்லைனில் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனது அறையில் சென்ற யுகசிற்பி அதன்பின் வெளியே வரவில்லை. இன்று காலை அவரை குடும்பத்தினர் அழைத்துள்ளனர். பல முறை கதவை தட்டியும் திறக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அப்போது யுகசிற்பி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இளைஞர் சடலமாக தொங்கியதை கண்டு அவர்கள் கதறி அழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியின் மகனான மருத்துவ மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment