திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ராஜிவ்
காந்தி உயிர் தொழில்நுட்ப மையத்திற்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்
கோல்வால்கர் பெயரை சூட்டுவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்.,
எம்.பி., சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.1990-ம் ஆண்டு
திருவனந்தபுரத்தில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்
தொடங்கப்பட்டது. 1991-ல் ராஜிவ் காந்தியின் நினைவாக அவரது பெயரில் உயிர்
தொழில்நுட்பத்திற்கான பிரத்யேக ஆய்வு மையமாக மாற்றப்பட்டது. தற்போது இதன்
இரண்டாவது வளாகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதற்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ்.,
தலைவர் கோல்வால்கர் பெயர் வைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்.இதற்கு கம்யூ., மற்றும்
காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அமைச்சருக்கு
எழுதியுள்ள கடிதத்தில் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் இது
என கூறியுள்ளார். மேலும் அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்த முடிவு
ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புதிய வளாகத்திற்கு ஒரு இந்திய விஞ்ஞானியின் பெயரை வைக்க வேண்டும் என்ற
எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன். இது நிறுவனத்தின்
நற்பெயரைத் தக்க வைக்கவும், பொதுத் தளத்தில் சர்ச்சைகளைத் தவிர்க்க உதவும்
என கூறியுள்ளார்.காங்கிரஸ்எம்.பி., உறுப்பினர் சசி தரூர் இதனை டுவிட்டரில்
கடுமையாக விமர்சித்துள்ளார்: மதவாத நோயை ஊக்குவித்தைத் தவிர
விஞ்ஞானத்திற்கு கோல்வால்கரின் பங்களிப்பு என்ன?
ராஜிவ், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தார். அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தார். பா.ஜ.க., தலைவர்கள் யாராவது இதை செய்துள்ளார்களா. 1966-ல் வி.எச்.பி., கூட்டத்தில் விஞ்ஞானத்தினை மதம் மேலாதிக்கம் செய்ய வேண்டும் என பேசியவரை மத்திய அரசு நினைவு கூறுகிறது.நான் ஒரு உள்ளூர் ஹீரோவை பரிந்துரைக்கிறேன்.
அவர் புகழ்பெற்ற பாக்டீரியாலஜிஸ்ட்டும் சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பி.பல்பு. 1863-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். கேம்பிரிட்ஜில் பயின்றார். சீரம் சிகிச்சை மற்றும் வெப்பமண்டல மருத்துவத்தில் நிபுணர். விஞ்ஞானத்திற்கோ, பொது சுகாதாரத்திற்கோ பங்களிப்பு செய்யாத ஒருவரை விட இவர் பொருத்தமாக இருப்பார். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:
Post a Comment