
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி.தலைமையில் மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இந்த மாதத்தில் மட்டும் 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை குறைக்குமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிரணியினர் சார்பில் அனைத்து தலைநகரங்களிலும் டிசம்பர் 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
#Covid19 உடன் புயல் மழையும் சேர்ந்து தாக்கிவரும் அசாதாரண சூழலில் #LPGPriceHike தாய்மார்களை நிலைகுலைய வைத்துள்ளது!
விலை உயர்வை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தலைமையிலான கழக மகளிரணி சார்பில் வரும் 21-ஆம் தேதி மாலை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
No comments:
Post a Comment