
திருவனந்தபுரம்: கேரளத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில், பள்ளிகள் திறப்பு மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், மார்ச் மாதத்தில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்வு நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், மாதிரி தேர்வுகள் மற்றும் ஆலோசனைகளும் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.
மேலும், 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது
நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும்
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment