அமெரிக்காவில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக பைலட் மினசோட்டா மாகாணத்தில் விமானத்தை தரையிறக்கினார். அதுவும் கார்கள் சென்று கொண்டிருக்கும் நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அது சிறிய ரக விமானம் என்பதால் , சாலையில் தரையிறக்குவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனாலும் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது விமானம் மோதியது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாலையில் விமானத்தை லாவகமாக தரையிறக்கிய விமானியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment