டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஐ.நா. சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போலீஸாரின் தடுப்புகளை மீறி லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டி வருகின்றனர்.

டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரீடு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐ.நா பொதுச் செயலாளரும் போராடும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளா்.
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்" என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டானியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை 5 முறை தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment