தைபே: தைவான் நாட்டில் கொரோனாவுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில்
இருந்த நபர், அறையை விட்டு 8 நொடிகள் வெளியே வந்ததால் அவருக்கு அந்நாட்டு
மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய
மதிப்பில் ரூ.2.6 லட்சமாகும்.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த
தொழிலாளி ஒருவர் தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பரவல்
காரணமாக அவர், தனியார் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில்
வைக்கப்பட்டார். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் அறையை விட்டு வெளியே வர
அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அனுமதியை மீறி அறையைவிட்டு வெளியே வந்த அவர்,
எதிரே இருந்த மற்றொரு நோயாளியின் அறைக்கு வெளியே உள்ள மேஜையில் ஏதோ ஒன்றை
வைத்துவிட்டு சென்றுள்ளார்.
வெறும் 8 நொடிகள் மட்டுமே நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்த
சிசிடிவி கேமராவில் பதிவானது.இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்த
தைவான் அரசு, அவருக்கு அந்நாட்டின் மதிப்புப்படி 1 லட்சம் டாலர்கள் அபராதம்
விதித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 2.6 லட்சம் ரூபாயாகும். கொரோனா பரவல்
காரணமாக தைவான் நாட்டில், கண்டிப்புடன் கொரோனா விதிமுறைகள்
பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment