சாதிவாரியான புள்ளி விவரங்களை திரட்டி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முக்கிய செய்தியில். அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், 69% இட ஒதுக்கீடு வழக்கை எதிர்கொள்ளவும் தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான புள்ளி விவரங்களை திரட்டி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் A.குலசேகரன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டி பாமக சென்னையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment