Latest News

விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றத்தின் யோசனை பட்டியல்

புதுடில்லி: வேளாண் சட்டத்தைநிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு, மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. அதே நேரத்தில் கோர்ட் எந்த முடிவும் எடுக்க முடியாது என தெரிவித்து விட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், டில்லியில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், டில்லியில் போக்குவரத்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா உட்பட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதி போபண்ணா, ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நடந்தது. அடிப்படை உரிமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மட்டும் விசாரித்து முக்கிய முடிவெடுக்கப்படும். சட்டம் குறித்த கேள்விகள் காத்திருக்கட்டும். சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்பதை நாங்கள் ஒப்பு கொள்கிறோம்.

அதில், எந்த கேள்வியும் எழுவில்லை. அந்த போராட்டம், மற்றொருவரின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது. விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதில், நாங்கள் தலையிட விரும்பவில்லை.

ஆனால், போராட்டம் நடத்தும் விதம் குறித்து கவனிக்க வேண்டியுள்ளது. என்ன மாதிரியான போராட்டம் நடந்து வருகிறது, பொது மக்களின் நடமாட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா என மத்திய அரசை கேட்க விரும்புகிறோம்.போராட்டம் தொடரலாம் பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாதவரை. ஒரு போராட்டம், அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும். மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இரு தரப்பினரும், தங்கள் தரப்பு வாதங்களை வைப்பதற்கு முன்னர், பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான குழு அமைப்பது குறித்து சிந்தித்து வருகிறோம். இந்த குழுவானது. எதை பின்பற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு சொல்லட்டும். அதேநேரத்தில் போராட்டமும் தொடரலாம்.சுதந்திரமான குழுவில் பாரதிய கிஷான் சங்கத்தின் பி சாய்நாத் இடம்பெறட்டும்.

விவசாயிகள் வன்முறையை தூண்டக்கூடாது. நகருக்கு செல்லும் வழிகளை மறிக்கக்கூடாது. டில்லிக்கு லெலும் வழிகளை மறிப்பதால், டில்லியில் உள்ள மக்கள் பசியில் வாடுவார்கள். உங்களின் பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடியும்.

அமர்ந்து உள்ளதால் மட்டும் தீராது. கேள்வி நாங்களும் இந்தியர்கள் தான். உங்களின்நிலை எங்களுக்கு தெரியும். உங்களின் பிரச்னைக்காக கவலை கொண்டுள்ளோம்.

நீங்கள் போராட்டம் நடத்தும் முறையை மாற்ற வேண்டும். உங்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக தான் குழு அமைக்க யோசிக்கிறோம்.வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான வழிகளை மத்திய அரசு ஆராய வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, வேளாண் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்குமா என அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினர் .பறிக்கக்கூடாது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்: போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒருவரும் மாஸ்க் அணியவில்லை.

அருகருகே அமர்ந்துள்ளனர். கொரோனா பரவல் உள்ள நிலையில், இது கவலைக்குரியது. கிராமங்களுக்கு செல்லும் அவர்கள். அதனை பரப்பக்கூடும். மற்றவர்களின் அடிப்படை உரிமையை விவசாயிகள் பறிக்கக்கூடாது.ஆட்சேபனை இல்லை பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான சிதம்பரம்: விவசாயிகள் பெரும்பாலானோர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே, ஒரு குழு பேச்சு நடத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் யோசனைக்கு பஞ்சாப் அரசு ஆட்சேபனை தெரிவிக்காது. குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விவசாயிகளும், மத்திய அரசும் முடிவு செய்ய வேண்டும் என்றார்.விசாரணைக்கு பின், இந்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.