
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியம் பொம்மஅள்ளி, உச்சம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார்.
பின்னர் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற மக்களும் மருத்துவ சேவைகளை எளிதில் பெற வேண்டும் என்பதற்காக 2001-2006 ஆட்சிக்காலத்தில் ரூ.571 கோடி மதிப்பில் தாலுகா மருத்துவமனைகளை மேம்படுத்தினார். அதன்படி பாலக்கோடு, தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா மருத்துவமனைகள் ரூ.24 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டன. அதேபோன்று மாவட்டத்தில் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 30 படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 41 அம்மா மினி கிளினிக்குகள், நகர பகுதிகளில் 2 அம்மா மினி கிளினிக்குகள் என மொத்தம் 43 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.
No comments:
Post a Comment