புதுடில்லி: மத்திய அரசுடனான விவசாயிகள் நடத்திய 5-ம் கட்ட
பேச்சுவார்த்தையில் எந்தசுமூக தீர்வும் எட்டப்படவில்லை. மீண்டும்
பேச்சுவார்த்தை டிச. 9-ம் தேதி நடக்கிறது.புதிய வேளாண் சட்டங்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு
இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. இன்று மீண்டும் 5-ம்
கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதிலும் எந்த வித தீர்வும்
எட்டப்படவில்லை.இதையடுத்து வரும் டிச. 9-ம் தேதி மீண்டும்
பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். டிச.8-ல் பந்த்முன்னதாக
மூன்று வேளாண் சட்டங்களையும், மத்திய அரசு திரும்ப பெறும் வரை, எங்கள்
போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன.மேலும் கோரிக்கையை
வலியுறுத்தி, நாடு முழுதும், 8ம் தேதி, கடையடைப்பு நடத்த அழைப்பு
விடுத்துள்ளோம் என்று அறிவித்துள்ளது.இதனிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி
நீடிப்பதால் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

No comments:
Post a Comment