
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இந்த விற்பனைக்கூடத்துக்கு மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலையில் செஞ்சியில் திடீரென மழை பெய்தது. இதனால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நெல்மூட்டைகளும் நனைந்து சேதமடைந்தன. இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த தார்ப்பாய் மூலம் நெல் மூட்டைகள் மூடப்பட்டன. இருப்பினும் 500-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் முழுவதுமாக மழையில் நனைந்தன. இதனால் நெல் ஈரமாக இருப்பதால், கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
No comments:
Post a Comment