
மிகை இயக்கக் கோளாறு உள்ள பெண்களில் நால்வரில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக கனடா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஏ.டி.ஹெச்.டி.(ADHD) என்பது கவனக்குறைவால் ஏற்படும் மிகை இயக்க(ஹைபெராக்ட்டிவ்) கோளாறு.
அமைதியான சூழலில் உட்கார முடியாதது, பணிகளில் கவனம் செலுத்த முடியாதது, அதிகமாக பேசுவது, காத்திருக்கும் தன்மை இல்லாமை, வேலையில் கவனக்குறைவு, மற்றவர்கள் சொல்வதை கவனிக்க முடியாமை உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருக்கும்.
இந்நிலையில் மிகை இயக்க கோளாறு உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தற்கொலைக்கு முயலும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிலும் பெண்கள் தற்கொலைக்கு முயல்வது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மொத்தமாக தற்கொலை முயற்சி செய்யும்(9%) ஆண்களில் 2% பேரும், பெண்களில் 24 சதவீதத்தினரில் 3% பேரும் மிகை இயக்க கோளாறு கொண்டவர்கள்.
'ஆர்ச்சிவ்ஸ் ஆப் சுசைடு ரிசெர்ச்' என்ற இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மிகை இயக்க கோளாறு உள்ளவர்கள் முன்பை விட தற்கொலை செய்துகொள்ளும் விகிதம் 56% அதிகரித்துள்ளதாக முன்னணி ஆய்வாளர் எஸ்மி புல்லர்-தாம்சன் கூறுகிறார்.
மேலும் ஆண்களைவிட பெண்களே இதனாலே அதிகம் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் மிகை இயக்க கோளாறு கொண்ட ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு அதிகம் என்றும் கூறுகிறார்.
மிகை இயக்க கோளாறு பிரச்னை கொண்ட சுமார் 21,000 பேர் பங்கேற்ற ஆய்வில் நான்கு பெண்களில் ஒருவர் தற்கொலைக்கு முயல்வது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவரே பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கடுமையான மனநல பிரச்சனைகளுடன் போராடும் இவர்களை மனநல மருத்துவ சிகிச்சையில் தொடர்ந்து உட்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
No comments:
Post a Comment