
மாநில பணியில் உள்ள 3 ஐபிஎஸ் அதிகாரிகளை, அங்கிருந்து அவர்களை விடுத்து, மத்திய பணிக்கு மத்திய அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பணயம் செய்தார். அப்போது, அவரது பாதுகாப்பு வாகனம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் பாஜக நிர்வாகிகள் சிலர் காயம் அடைந்தனர்.
இதனிடையே, ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்க எம்.பி. கல்யாண் பானர்ஜி உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மே. வங்க அரசு நிர்வாகத்தை மத்தியில் உள்ள பாஜக அரசு மிரட்ட முயற்சி செய்கிறது. அதனால் தான், தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சட்டம்-ஒழுங்கு விவகாரம் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகளை பழிவாங்குவது சரியல்ல. எனவே, சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசு சட்டப் பேரவைக்குப் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கும், உங்கள் உள்துறை அமைச்சருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
இதனால், கடும் கோபம் அடைந்த மத்திய அரசு, நட்டாவின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றியும் ஆணையிட்டுள்ளது. இந்த விவகாரம் பின்னர் முதல்வர் மம்தாவுக்கு தெரியவர மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment