கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி கடந்த 8 மாதங்களாக 3 கட்டங்களில் உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. மேலும் கோவிஷீல்டு தடுப்புப் மருந்தை இந்தியாவில் ரூ.250-க்கு விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment