தீபாவளி பண்டிகை அன்று, அரசு அறிவித்த 2 மணி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பார்வையிட்டு கண்காணிப்பு கேமரா மையம் மற்றும் சேவை மையங்களை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தியாகராய நகரில் ஏற்கனவே 200 கேமராக்கள் உள்ள நிலையில் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்யுமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய தெரிவித்த அவர், அரசு அறிவித்த நேரங்களை தவிர மற்ற

No comments:
Post a Comment