
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) அளிக்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கும் என ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியின் (ஆர்எல்பி) ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யும் ஆன ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெனிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"என்டிஏ-வின் கூட்டணி கட்சி ஆர்எல்பி. ஆனால், அதன் பலம் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடம் உள்ளது. விவசாயிகள் நலன் கருதி இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், என்டிஏ-வில் அங்கம் வகிப்பது குறித்து நான் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்."
ஆர்எல்பி-யின் ஒரே எம்.பி. பெனிவால். ராஜஸ்தான் பேரவையில் ஆர்எல்பி-க்கு 3 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment