புதுடெல்லி,இந்தியாவில் தீவிரமடைந்து வந்த கொரேனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் எம்.பியுமான மனிஷ் திவாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "எனக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. உடனாடியாக பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வேறு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment