
நாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி நிலையங்களில், இனி வரும் காலங்களில் சமஸ்கிருத மொழியில் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதிகை டிவி உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் அகில இந்திய வானொலி நிலையங்களில் சமஸ்கிருத மொழியில் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், தூர்தர்ஷனில் தினமும் காலை 7.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை சமஸ்கிருத மொழியில் செய்திகள் ஒளிபரப்பாகும். இந்த சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநிலங்களும் ஒளிபரப்ப வேண்டும் என்றும், சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் வாராந்திர செய்தி தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, மற்றும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தி மொழியை அடுத்து, மாநிலங்களில் சமஸ்கிருத மொழியை மத்திய அரசு, வேண்டும் என்றே திணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment