தற்போது அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது தேர்தல் வாக்குறுதிப்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தொடங்கியிருக்கிறார் . இதன்பிரகாரம் , கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஜோ பைடன் நியமித்துள்ள குழுவில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் செலின் கவுன்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் 13 பேர் அடங்கிய இந்த குழுவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் விவேக் மூர்த்தி மற்றும் மருத்துவர் அதுல் கவாண்டே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் மருத்துவர் செலின் கவுண்டர் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலையம் கிராமத்தை சேர்ந்த ராஜ் நடராஜன் கவுண்டர் என்பவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:
Post a Comment