திருநெல்வேலி:தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு
சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கினால் அவற்றின் உற்பத்தி பெருகுவதோடு,
விவசாயத்திற்கான பயன்பாடும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. டீசல், பெட்ரோல்
வாகனங்களால் மாசு பாதிப்பு ஏற்படுவதால் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு
வரவேற்பு உள்ளது. முதற்கட்டமான இருசக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை
அறிவிக்கப்பட்டிருப்பதால் இனி வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் டூவீலர்களின்
பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மூன்று சக்கர எலக்ட்ரிக்
வாகனங்களுக்கு இன்னமும் தமிழக அரசு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கவில்லை.
இந்தியாவில் தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் எலக்ட்ரிக்
வாகனங்களுக்கான வரிவிதிப்பு, பதிவு கட்டணம், சாலைவரிகள் என நிர்ணயித்து
சட்டப்பூர்வ அனுமதியளித்து உள்ளன.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்களை
அனுமதிக்கும் கோப்புகள் போக்குவரத்து துறையில் கிடப்பில்
கிடக்கின்றன.சென்னையில் ஸோகோ சாப்ட்வேர் நிறுவன முதன்மை செயல்அதிகாரியான
ஸ்ரீதர்வேம்பு கோடீஸ்வரர் ஆவார். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், சீனா என
பல்வேறு நாடுகளில் தமது நிறுவனத்தை நடத்திவருகிறார். தற்போது தென்காசி,
மத்தளம்பாறையில் நிறுவனத்தை துவக்கி அங்கேயே வசித்துவருகிறார். தமது
வளாகத்தில் மேற்கொள்ளும் பணிகளுக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத எலக்ட்ரிக்
ஆட்டோவை ஓட்டிவருகிறார்.
சென்னையில் உள்ள ஸோகோ நிறுவனத்திலும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த ப்படுகின்றன. தற்போது மாநகராட்சிகள், விமான நிலையங்கள், சுற்றுலா தலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு அனுமதியளித்தால் பொதுவான பயன்பாடு அதிகரிக்கும். மாசு பாதிப்பு குறையும். கோவையில் மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் இகோடைனமிக்ஸ் நிறுவன உரிமையாளரர் விஜயன்சீனிவாஸ் கூறுகையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது, அதை பின்பற்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சட்டப் பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் போக்குவரத்து துறை அதற்கான அனுமதி தரவில்லை. சட்டப்பூர்வமான அனுமதி கிடைத்தால்தான் வாகனங்களை ரோட்டில் ஓட்ட முடியும். எலக்ட்ரிக் வாகனங்கள் வெறும் 4 யூனிட் மின்சாரத்தின் மூலம் 80 கி.மீ.,துாரம் வரை பயணிக்க முடியும். 4 பேர் செல்லும் ஆட்டோ முதல், விவசாயத்திற்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வரை தயாரித்துள்ளோம்.
அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்துவிட்டு அனுமதிக்காக காத்திருக்கிறோம். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மேற்கொள்ளும் முதலீடும் மிககுறைவாகும். அவற்றை பொது மக்கள் பயன்படுத்த அனுமதித்தால் மட்டுமே மாசு பாதிப்பை முழுமையாக குறைக்க முடியும். நடுத்தர குடும்பத்தினரும் இதனை வாங்கும் வகையில் செலவும் குறைவு என்பதால் அரசு அதற்கான அனுமதியை விரைந்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:
Post a Comment