கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல், பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 18 சட்டப்பிரிவுகளின் தேடப்படும் குற்றவாளியான செக்ஸ் சாமியார் சதுர்வேதி வெளிநாடுக்கு தப்பி செல்லாம் இருக்க, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை தி.நகர். பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் நடத்தி வந்தவர் சாமியார் சதுர்வேதி. தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று சொல்லும் சதுர்வேதி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
அரிசியை வெண்பொங்கல் ஆக மாற்றிகாட்டுவார். இதே போல பல்வேறு சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சதுர்வேதிக்கு ஏராளமான பெண் பக்தர்கள் உண்டு.
ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர், தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கூறி, அவற்றை சதுர்வேதிதான் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் அந்த தொழிலதிபரின் வீட்டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்தார் சதுர்வேதி. இதனால் தொழிலதிபரின் மனைவியும் 16 வயது மகளும் அவருக்கு பக்தை ஆனார்கள். இந்த பழக்கத்தில் தொழிலதிபரின் வீட்டின் கீழ்தளத்தில் தங்கிவிட்டார் சதுர்வேதி.
தொழிலதிபரின் மனைவியையும் மகளையும் நிர்வாண பூஜை செய்ய வைத்து, அவர்களை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்திருக்கிறார்.

இது தெரிந்ததும், சதுர்வேதியை வீட்டை காலி செய்யச்சொல்லி விட்டார் தொழிலதிபர். இதனால், தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திராவுக்கு கடத்திசென்றுவிட்டார். வேறு வழியின்று மனைவியையும் மகளையும் மீட்டுத்தரும்படி சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார்.
கற்பழிப்பு,
கடத்தல், சிறை வைத்தல், பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 18
சட்டப்பிரிவுகளின் கீழ் சதுர்வேதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 2004ல்
கைது செய்யப்பட்டார். தொழிலதிபரின் மனைவியும், மகளும் மீட்கப்பட்டனர்.
கைது
செய்யப்பட்ட சதுர்வேதி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டார். இதனால்
சென்னை மகளிர் நீதிமன்றம், அவரை தேடப்படும் குற்றவாளியாக
அறிவித்திருக்கிறது.
15 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் சதுர்வேதியை ஒருவாரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதனால் தனிப்படை போலீசார், தீவிர வேட்டையில் இருக்கிறார்கள். அதே நேரம் சதுர்வேதி வெளிநாடு தப்பிசென்றுவிடாமல் இருக்கவும் விமான நிலையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment