புதுடில்லி: இறுதி கட்ட ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக ர்ஜேடி
காங்., கூட்டணி தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில்
நடைபெற்று வரும் ஓட்டு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருகிறது. இரவு 9.45
மணி நிலவரப்படி பா.ஜ.,கூட்டணி 125 இடங்களிலும் , லாலுமகன் கூட்டணி 110
இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. இந்த எண்ணிக்கை அவ்வப்போது மாறி மாறி
வந்து கொண்டுள்ளது.95 சதவீத ஓட்டுக்கள் எண்ணப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன்
தெரிவித்து உள்ளது. இதனிடையே ராஷ்டீரிய ஜனதா தளம் காங் கூட்டணி தேர்தல்
கமிஷனை சந்தித்து புகார் அளிக்க உள்ளது. அதில் பா.ஜ., கூட்டணி இறுதி கட்ட
ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடத்தி வருவதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு
அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment