
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் அகில இந்திய வேளாளர் மற்றும் வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர், தலைவர் ஆர்.ஏ. அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேளாளர் என்ற பெயரை வேறு சில சமூகத்தினர் பயன்படுத்துவதற்கும், அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் சில அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள முசுகுந்த வேளாளர் சமுதாய அமைப்பைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் வேளாளர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேளாளர் இனப் பெயரை வேறு யாருக்கும் வழங்க விட மாட்டோம். எங்கள் சமூகத்தின் அடையாளமான வேளாளர் என்ற பெயரை வேறு சமூகத்தினருக்கு தாரை வார்க்க மாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment