
விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ஹரியாணாவில் ராணுவ உத்திகள் கையாளப்பட்டுள்ளன. டெல்லி செல்லும் வாகனங்களை தடுக்க பாதைகளில் குழிகளை வெட்டி தடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இரண்டு தினங்களுக்காக விவசாயிகள் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. இதன் இரண்டாவது நாளான இன்று ஹரியாணாவின் விவசாயிகளை டெல்லி செல்ல தடுக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.
பாஜக ஆளும் முதல்வர் மனோகர் லால் கட்டர் உத்தரவின் பேரில் இங்கு விவசாயிகளுக்கு எதிராக ராணுவ உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. வழியில் ஆழமான குழிகளை வெட்டி வாகனங்கள் டெல்லி செல்லாதவாறு தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுபோல், முக்கியப் பாதைகளில் நீளமான குழிகளை வெட்டி வாகனங்களை தடுக்கும் உத்தி போர்காலங்களில் ராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவது ஆகும். இதை விவசாயிகள் போராட்டத்தில் அவர்களை ஒடுக்க காவல்துறையினர் பயன்படுத்தி உள்ளனர்.
இதையும் மீறி பல இடங்களில் விவசாயிகள் ஒன்றிணைந்து தம் டிராக்டர்களை தூக்கி குழிகளை தாண்ட வைத்துள்ளன. பிறகு தொடர்ந்த அவர்கள் போராட்டப் பயணத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுக்க முயலப்பட்டன.
தற்போது வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதற்காக போராட்டங்களில் கலந்து கொளும் விவசாயிகள் குளிருக்கான உல்லன் மற்றும் தொல் உடைகள் அணிய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் மீது ஹரியாணா போலீஸார் ஆங்காங்கே நீர் நிரம்பிய டேங்குகளுடன் டிரக்குகளை நிறுத்தி நீரை பீய்ச்சி அடித்துள்ளனர். எனினும், விவசாயிகள் எதையும் பொருட்படுத்தாமல் உத்வேகத்துடன் தங்கள் போராட்டத்தை தொடரும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment