நிவர் புயல் கரையை கடக்கும்போது பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள படகுகள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என அச்சப்படுகின்றனர் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் கரையை கடக்கும்போது அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக மயிலாடுதுறையும் உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் நாட்களில் அதிக மழை இருக்கும் என்றும் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று வரை மழை இல்லாதிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது மயிலாடுதுறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் துறைமுகத்தில் 1500 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 120 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்குகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை பழையாற்று துறைமுகத்திற்கு பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில். பூம்புகார் துறைமுகத்திலும் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன காலை முதல் பலத்த மழையும் கடல் கொந்தளிப்பும் என்பதால் இரவில் புயல் கரையை கடக்கும் பொழுது இது மேலும் அதிகமாகி காற்றின் வேகத்தினால் படகுகள் சேதமடைய வாய்ப்பு இருப்பதாக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment