
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தானில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்யவும் வெடிக்கவும் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தடை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார். பட்டாசு வெடித்தால் கொரோனா நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளின் ஆரோக்கியத்துக்கு தீங்காக அமையும் என தெரிவித்த முதலமைச்சர் அசோக் கெலாட், இந்தாண்டு தீபாவளிக்கு மாநிலத்தில் பட்டாசு விற்பனையை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அரசின் உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்து பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment