
சென்னை: உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண்துறை
ஒதுக்கீடு செய்து கவர்னர் ஒப்புதல் அளித்தார்.அமைச்சர் துரைக்கண்ணு மறைவை
தொடர்ந்து அவரிடம் இருந்த வேளாண்துறையை உயர்கல்விதுறை அமைச்சருக்கு அளிக்க
முதல்வர் பழனிசாமி கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.
அன்பழகனுக்கு வேளாண் துறையை ஒதுக்கீடு செய்தார். கே.பி.அன்பழகன், இனி
உயர்கல்வி மற்றும் வேளாண்துறைக்கு பொறுப்பு வகிப்பார்.
No comments:
Post a Comment