அமெரிக்காவில் வாழும் கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு பேருதவியாக
இருந்தது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா துவங்கிய ஒபாமா கேர்
காப்பீட்டு திட்டம். ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவைவிட கீழே
இருந்தால் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்து அதிக பலன் பெற முடியும்.
அதிக செலவு பிடிக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்த காப்பீடு பயன்படும்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இத்திட்டம் முடங்கியது.
புதிதாக இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்தவர்கள் சேர்க்கப்படவில்லை.
தற்போது அமெரிக்காவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடுகையில், வைரஸ்
தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் இத்திட்டம் மீண்டும்
துவக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள
அடித்தட்டு தொழிலாளர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி
முதல் ஒபாமாகேர் காப்பீட்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்
நடுத்தர வர்க்கம் மட்டுமில்லாமல் அமெரிக்க நடுத்தர வர்க்கமும் இந்த
திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் அவர்களது ஆண்டு வரி குறையும்.
இதன்மூலம் அவர்களது சேமிப்பு அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும். இன்னும் மூன்று நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில் ஒபாமாகேர் திட்டம் துவங்கப்பட உள்ளது. இது ஜனநாயக கட்சி மீது அமெரிக்கர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:
Post a Comment