
தெற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பெருத்த சேதங்களை ஏற்படுத்திவிட்டு சென்றது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
இந்நிலையில் கடலூரில் புயலின் போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 9,000 வாத்துகளும், 5,000 கோழிகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவத்தானூர் ஏரியில் வைக்கப்பட்டிருந்த, காசி என்பவருக்குச் சொந்தமான 3,000 வாத்துகளும், அதேபோல் அதே பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான 6,000 வாத்துகளும், மணப்பாக்கம் பகுதியில் குப்பன் என்பவருக்குச் சொந்தமான 5,000 கோழிகளும் நீரில் அடித்துச் சென்று இறந்துள்ளது.
மழை வெள்ளத்தில் கோழிகளும், வாத்துகளும் இறந்து மிதக்கின்றன. இதனை பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் நிலையில், அதன் உரிமையாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதனால், 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய வாத்துகள் இறந்திருப்பதால், இதற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தாங்கள் கோழி, வாத்துகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் இவ்வளவு விரைவாக தண்ணீர் நிரப்பும் என எதிர்பார்க்கவில்லை என அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
newstm.in
No comments:
Post a Comment