இந்தியாவின் ஜெய்ப்பூர், கொல்கத்தா. மும்பை உள்ளிட்ட 30 நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரும் என்று, இன்று வெளியான ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கனவே பாதித்து உள்ளன. இந்த நிலையில் சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வின் முடிவு இன்று வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆய்வின் முடிவு படி, வரும் 2050ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நூறு முக்கிய பெருநகரங்களில் குறைந்தது 35 உலகின் கோடி மக்கள் வருவார்கள் என்றும். உலகின் மிக முக்கிய பெருநகரங்களில் இந்த தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்பு உண்டாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ள மக்கள் தொகைக் கணக்கில் இருந்து 51% உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய நகரங்களான ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 30 பெருநகரங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment