கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்ததாக எஸ்ஆர்எம் உள்ளிட்ட 9 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களிடம் நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாய் கட்டணம், தீவிர சிகிச்சை பெறுவோர்களிடம் நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை 9 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை உரிமைத்தை ரத்து செய்துள்ளது.

அப்பாஸ்வாமி மருத்துவமனை, எஸ்ஆர்எம் மருத்துவமனை, ஸ்கடர் நினைவு மருத்துவமனை உள்ளிட்ட 9 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .
newstm.in

No comments:
Post a Comment