
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை அந்த கூட்டணியில் இருந்து வெளியேற்றவும், தலித் வாக்கு வங்கியை திமுக அறுவடை செய்துவிடக்கூடாது என்ற நோக்கிலும் தொல்.திருமாவளன் மீது தவறான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசிக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் எம்பி-யாகவும் உள்ளார்."தலித் தலைவர்களில் பேச்சு திறமை, ஆளுமை, கூட்டணித் தலைவர்களிடம் அரசியல் அணுகுமுறை மற்றும் பெரியார், அம்பேத்கார் கருத்தில் உறுதி என பலவற்றிலும் தனித்துவத்துடன் விளங்கி வருகிறார்.
மேலும், வரும் தேர்தலில் தமிழகம் முழுக்க அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஆனால், எதிர் தரப்பில் தலித் மக்களை கவரும் வகையில் வலுவான தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் தான் திருமாவளவன் குறிவைக்கப்பட்டுள்ளார்.

மேலும், வரும் தேர்தலில் திருமாவளவன் மூலம் திமுக தலித் வாக்குகளை பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கிலேயே சிலர் அரசியல் செய்கின்றனர் என சிலர் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, "பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை எரிக்கும் போராட்டம் நாளை நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதனை தடுக்கவேண்டும் என்ற நோக்கிலும் அவர் மீது இது இப்படி தவறான தகவலை பரப்பி இருக்கலாம்" என விசிக நிர்வாகிகள் கவலையோடு கூறுகின்றனர்.
ஆக மொத்தம் ஜாதி, மதத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளது.
No comments:
Post a Comment