
மருத்துவத் துறையில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரியும் திருநெல்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமுன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை வகித்தார்.
பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் பாஸ்கர், துணை செயலாளர் ஜெயக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன் தலைமை வகித்தார்.
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் எம்.சி. கார்த்திக் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்ச்செல்வன், எம்.சி. சேகர், வேலாயுதம், ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment