
பாஜகவின் ஒரு கிளை அமைப்பு போலத் தான் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலையொட்டி பிகார் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 22ஆம் தேதி வெளியிட்டார். அதில் பிகார் தேர்தலில் பாஜக வென்றால் மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது விமர்சனத்திற்குள்ளானது.
இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி, தோதல் விதிமீறலாகக் கருதப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இதுகுறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத், "இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு கிளை. எனவே அவர்களிடமிருந்து நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது." என விமர்சனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment