
கோவை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் திடீர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 28-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று, ஈரோடு, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில், கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக வருமானவரித்துறையினர் பையாகவுண்டர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிந்த திமுக பிரமுகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment