
சென்னை:
கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை நீக்கும் விதமாகவும், பொழுது போக்குக்காகவும் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் மருத்துவமனையின் 2-வது தளத்தில் 500 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் நேற்று திறக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நூலகம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு 6 மணி நேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த நூலகம் 16 பேர் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது மருத்துவம், வரலாறு, மனநல ஆரோக்கியம், யோகா, கல்வி, கதைகள், குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளிட்ட, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1,700 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment