பாஜகவினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவரது தொண்டர்கள் அரணாக இருந்து ஈரோட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பிக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கருப்புக் கொடி காட்டினர்.
இதைத் தொடர்ந்து அவரை பாதுகாப்பாக போலீசார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மீண்டும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்ற பிஜேபி மற்றும் இந்து முன்னணி சார்ந்த நிர்வாகிகள் திருமாவளவனை கற்களை கொண்டு தாக்கினர். இதனால், பதிலுக்கு இந்து முன்னணி மற்றும் பிஜேபி சார்ந்த நிர்வாகிகளை விசிக-வினர் தாக்கினர்.

இதனால் திருமாவளவனை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும்போது, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நத்தக்கரை டோல்கேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காத்திருந்து பாதுகாப்பாக அவரை வழியனுப்பி வைத்தனர்.
அப்போது நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்,சிவசக்தி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு அம்பேத்கர் என்று பெயர் சூட்டினார். பின்பு தென்னங்குடிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சுமணியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் வாழ்த்துகளை திருமாவளவன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆத்தூர் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் சேலம் மாவட்ட எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாண்டிச்சேரி எல்லைக்கு அனுப்பி வைத்தனார்.

No comments:
Post a Comment