
சென்னை: அரக்கனே யோகி ஆதித்யநாத்தே பதவி விலகு, தலித் மற்றும் பெண்கள் விரோத சனாதன அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், ''உத்தரப் பிரதேச முதல்வரே பதவி விலகு; இந்த மாநிலத்தில் மட்டும் 2019ல் தலித்கள் மீது 11829 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. ''சனாதன அரக்கனே யோகி ஆதித்யநாத்தே பதவி விலகு'', ''தலித்களுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்கொடுமைகள்'', ''மோடி அரசே, யோகி அரசே, சாதிவெறி, மதவெறி, ஆணாதிக்க வெறி ஆகியவற்றின் ஊற்றுக்கண் சனாதன வெறியை கை விடு''
மோடி அரசே, யோகி அரசே சனாதன வெறியை பரப்பாதே, தலித்களையும், பெண்களையும் வதைக்காதே'' என்று பதிவிட்டுள்ளார். இந்த வாசகங்கள் அடங்கிய பதாகையை தனது கையில் ஏந்தியவாறு பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த திருமாவளவன் மத்திய அரசை கடுமையாக சாடி இருந்தார். அவர் தனது அறிக்கையில், ''சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிற ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகிறது.
அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக பாபர் மசூதி வழக்கில் சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது. நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடும்'' என்று தெரிவித்து இருந்தார்.
No comments:
Post a Comment