மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு
கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விளக்கிக்கொள்ளப்பட்டாலும் சுற்றுலா
தளங்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல்
இருந்து அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால்
தென்காசியில் அனைத்து அருவிகளான மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி
புலியருவி போன்ற அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படாததால் குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இருப்பினும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்

No comments:
Post a Comment